Wednesday, September 1, 2010

நான் இந்த ப்ளாக்கரை நிறுவுவதற்கு முன் தமிழ் இலக்கணத்துக்குத்   தனியே ப்ளாக்கர் இல்லை என்று சமீபத்தில் நடைபெற்ற இணைய மாநாட்டில் கூறியது உண்மை என்று நினைத்திருந்தேன். ஆனால் வளையில் தேடிப் பார்க்கும்பொழுது தமிழ் இலக்கணத்திற்கு நிறைய ப்ளாக்கர் இருப்பதை அறிந்தேன். எனவே அவற்றில் கூறப்படாத செய்திகளாக எனது ப்ளாக்கரில் கூற முயலுகிறேன்.

Friday, August 27, 2010

அன்பிற்கினிய தமிழ் அறிஞர் பெருமக்களுக்கு

அன்பிற்கினிய தமிழ் அறிஞர் பெருமக்களுக்கு


வணக்கம். கோவையில் 2010 ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிலும்  அம் மாநாட்டையொட்டி நடைபெற்ற இணைய மாநாட்டிலும் கட்டுரையாளராக கலந்து கொண்டேன். அதில் தமிழில் தமிழ் இலக்கணத்திற்கு என்று இதுவரை வலைப்பூக்கள் (Blogspot ) இல்லை என்ற வருத்தத்தை வெளிப்படுத்தினர். அப்பொழுதே நான் ஊருக்கு சென்றவுடன் தமிழ் இல்லக்கணத்திற்கு என்று ஒரு வலைப்பூவைத் தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஆயினும் உடனடியாக அதனைத் தொடங்க இயலவில்லை. இவ்வளவு காலம் தாழ்ந்து போனது. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.


எப்படியோ இன்று தமிழ் இலக்கணத்திற்கு என்று தனியே ஒரு வலைப்பூவை உருவாக்கி இணையத்தில் உலவ விடுவதில் - தமிழின் உயர்விற்கு நம்மாலும் ஏதோ செய்ய முடிந்ததே என்று மகிழ்ச்சி அடைகிறேன். என் தாய் மொழிக்கு நான் தலை வணங்குகிறேன்.


இதில் தமிழ் இலக்கணம் பற்றிய செய்திகளை எளிய முறையில் வழங்க முடிவெடுத்துள்ளேன். தமிழ் ஆர்வலர்கள் பார்த்தும்  படித்தும்  பயன் பெற வேண்டுகிறேன். கூடவே கருத்துரைகளையும் வழங்கினால் அதற்கேற்ப மாற்றங்களைச் செய்யவும் விரும்புகிறேன்.


நன்றியுடன்,


பேராசிரியர் க.துரையரசன்.